நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூப்பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 04:04
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது சிம்ம, ரிஷப வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பகிரங்கன் பானை மாநிலத்தில் செயல்படுத்தும் தீச்சட்டி எடுத்து பிரார்த்தனைகளை நிறைவேற்றியவர் குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் ஊர்வலம் நடத்தினர். நேற்று நள்ளிரவில் அம்மன் வான வேடிக்கைகள் கலை நிகழ்ச்சிகள் மேள, தாளம் முழங்க பூ பல்லக்கில் வீதி உலா வந்தார். நேற்று அம்மன் மஞ்சள் நீராடி முளைப்பாரியுடன் நகர் வலம் வந்து ஊஞ்சலில் அமர்ந்து பாவாடை அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன் பாண்டியராஜன் ஜெயபாண்டியன் சுரேஷ்பாபு கருமலை பாண்டியன் செய்திருந்தனர்.