திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம் : 10 ஆயிரம் பேருக்கு மதிய உணவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 08:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. இன்று (ஏப். 8) மதியம் 12:20முதல் மதியம் 12:40 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று நடைபெறும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணத்திற்குவரும் பக்தர்களுக்கு 10,000 நபர்களுக்கு மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்குள் ஏழு இடங்களில் ஏர் கூலர்கள், திருக்கல்யாண நிகழ்வை பக்தர்களும், பொதுமக்களும் காண்பதற்காக 10 இடங்களில் டிவிகளும் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்கு மொய்பணம் ரூ.100 செலுத்துபவர்களுக்கு சுவாமி படம், மாங்கல்ய கயிறு, 2 வளையல், கோயில் பிரசாத பைகளில் வழங்கப்படுகிறது. உபயதாரர்கள் மூலம் நீர்மோர் பந்தல் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு காலையில் கோயில் வளாகத்தில் 2,000 பேருக்கு சிற்றுண்டியும், மதிய உணவும், மலைக்கு பின்புறம் பசுமடத்தில் உபயதாரர்கள் மூலம் 10,000 பேருக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் கிரிவல பாதையில் பக்தர்களுக்கு குடிநீர்வசதி மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.