Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு ... சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. காத்திருக்கு பதவி உயர்வு சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. பணப்புழக்கம் அதிகரிக்கும்.. லாபமோ லாபம்
எழுத்தின் அளவு:
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. பணப்புழக்கம் அதிகரிக்கும்.. லாபமோ லாபம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
06:04

புனர்பூசம்: கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தி யோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி அனைவரிடமும் காரியங்களை சாதித்துக் கொள்வதில் வல்லமை மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே,
இந்த வருடம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் உங்கள் பேச்சில் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நற்செயல்களால் புகழை தக்க வைத்துக் கொள்வீர்கள். வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து வெளியேறுவார்கள். எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பு கொடுப்பர்.  கணவன் மனைவி ஒற்றுமையில் சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிதாக வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.   
அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சம்பள உயர்வால் பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். வீடு மனை வாகனங்களில் முன்னேற்றம் உண்டு. புத்திரர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்டிப்பது நல்லது. எதிராக செயல்படுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவர்.  
வியாபாரிகள் ஆர்வமுடன் செயல்பட்டு வளர்ச்சி காண்பர். பொருளாதார நிலை உயரும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பணத்தில் வீட்டு மனை, நிலம் வாங்குவீர்கள்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சேமிப்பை சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் நிலை ஏற்படும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்கும் வாய்ப்புண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் செல்வாக்கு அதிகரிக்கும்.  பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆயுள் பலம் பெறும்.  
 
அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். தொண்டர்களின் மத்தியில் மதிப்பு மரியாதை உயரும். அவர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் முக்கிய பொறுப்புகளை கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். சில சமயத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சில சமயத்தில் வம்பு, வழக்குள் வந்து சேரலாம். அதற்காக வீண் கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் சாதனை படைத்து பாராட்டு, விருது கிடைக்கப் பெறுவார்கள். நீச்சல்  வீர்கள் சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். பேசும் பேச்சில் அனல் வீசும். பொறுமையும். நிதானமும் அவசியம். சக கலைஞர்களால் உதவி கிடைக்கும்.  

மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
பரிகாரம்: நவகிரக குருவுக்கு மஞ்சள் பூ மாலை சாற்றி வழிபட துன்பம் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 2, 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:


பூசம்: லாபமோ லாபம்

புகழ் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு, பொன்னான வாழ்க்கையை அமைத்து, நடுநிலைமையுடன் நடக்கும் எண்ணத்துடன் கொண்ட கடமையை பெரிதென போற்றும் பூச நட்சத்திர அன்பர்களே,
இந்த வருடம் நீங்கள் செய்யும் எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சியால் சேமிப்பு உயரும். சமூகப்பணி பணியாற்றுவதில் அக்கறை உண்டாகும்.

குடும்பத்தில் வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு, மனை, வாகனம் தொடர்பான வகையில் அனுகூலம் உண்டாகும். புதிதாக திருமணவானவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கடன், வழக்கு, எதிரி ஆகிய வகைகளில் இருந்த எதிர்ப்புகள் சமரச பேச்சுகளால் சுமூகநிலைக்கு வரும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். அனுபவசாலிகளின் ஆலோசனைகளால் குடும்பத்தை நல்ல முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவீர்கள்.  தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவும் வளர்ச்சிக்கு துணை நிற்கும். செய்தொழிலில் முன்னேற்றமும் ஆதாயமும் கணகூடாக கிடைக்கும். தாயின் அன்பும் தந்தையின் ஆதரவும் நல்ல முறையில் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் காலகட்டமாக அமையும்.  

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த மந்தநிலை மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு, தனியார் சுற்றுலா துறையில் பணிபுரிபவர்கள் பொருளாதார நிலை உயரப் பெறுவர். அலுவலகத்தில் உங்களின் பங்களிப்பு சகஊழியர்களின் பாராட்டைப் பெறும்.
 
தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளால் பொருளாதார வளர்ச்சி காண்பர். தொழிலுக்காக புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அனைத்து தொழிலதிபர்களும் லாபத்தை சேமிக்கும் விதத்தில் முன்னேறுவர். அழகுக்கலை நிபுணர்கள், அழகு நிலையம் நடத்துபவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். வெளியூர் பிரயாணங்களால் நன்மைகள் உண்டாகும்.
பணிபுரியும் பெண்கள் சகஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியத்துடன் பணி செய்தால் மட்டுமே இடையூறுகளை எதிர்கொள்ள முடியும். பள்ளிக்கால தோழிகள் சந்திப்பால் ஆறுதல் காண்பீ்ர்கள். குடும்பத்தை  நிர்வகிக்கும் பெண்கள் புதியவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம்.  முன்பகை உள்ளவர்களிடம் விழிப்புடன் செயல்படுவது நல்லது.   கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 
கலைத்துறையினர் வாழ்வில் மேன்மை அடைவர். அந்நிய நாடுகளுக்கு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே, வருமானம் போதவில்லையே என ஏங்க வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரிவர செய்பவர்கள் வெற்றிக்கனியைப் பறிப்பர். வெளியூர் செல்லும்போது அலைச்சலும் அதன்மூலம் வேலைப்பளுவும் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
 
அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பர்.  மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பணஇழப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். உடனிருப்பவர்களால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்பு, வழக்குகள் வந்து சேரலாம் கவனம்.

மாணவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடத்தை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம். படிப்பை விட்டு வீண்பொழுது போக்குகளால் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பிற்கு இடையூறு வரலாம்.
பரிகாரம்: சனி பகவானை வழிபட நல்வழி பிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெண்மை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ

ஆயில்யம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்

சராசரி மனிதனாகப் பிறந்து நற்செயல்கள் புரிந்து பேரும் புகழும் பெருமையும் அடைந்து சாதனையாளராகத் திகழ்ந்து உரிய பலன் பெறும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். பிள்ளைகள் தவறான நண்பர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புண்டு. விழிப்புடன் செயல்பட்டு அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமையில் அந்நியர்களின் குறுக்கீடுகளால் மனக்கசப்பு தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். ஆயுள் ஆரோக்கியம் பலம் பெற கிரக அனுகூலம் நன்றாக உள்ளது. தந்தைவழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வதிலும் உதவிகள் செய்வதிலும் தடைகள் உண்டாகும். செய்யும் வேலைகளில் இருந்த மனநிறைவு குறைய இடமுண்டு. வீடு, மனை, வாகன வகையில் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்.  
 
பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கை துறையில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தன்துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவால் திடீர் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவர். அரசு, தனியார் வங்கிகளில் உயர்பதவி வகிப்பவர்கள்  சகஊழியர்களின் தன்னிச்சையான செயல்களால் மனவருத்தம் அடைவார்கள். தகுதியில்லாத நபர்களுக்கு நிதிஉதவி செய்து அதன் பாதக நிலைகளை உங்கள் தலையில் சுமத்த வாய்ப்புண்டு. கவனமுடன் செயல்பட்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
 
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சீரான வளர்ச்சி காண்பர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதாரம் சீராக இருக்கும். பணியாளர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தொழில் துறையினர் வரவு செலவு கணக்கை சரியாக கையாள வேண்டும். முதலீடுகள் எதுவும் போடாமல் நடப்பு நிலையையே தொடர வேண்டும். காய்கறிகள், பழவகைகள் வியாபாரம் செய்பவர்கள் இடமாற்றம் அடைவர். கைகளில் பொருளாதரம் தாராளமாக புழங்கும்.

பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறுவர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மையை காண்பீர்கள். கணவர், குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் செயல்படுவதன் மூலம் கவலை மறைந்து மனமகிழ்ச்சியும் நிம்மதியும் காண்பீர்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வந்து சேரும்.

அரசியலில் உள்ளவர்கள், பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவால் உயர்பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு திடீரென மருத்துவச் செலவு ஏற்படலாம்.
 
கலைத்துறையினர் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து குவியும். அதற்காக அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்.   பத்திரிகைத்துறையினர் முன்னேற்றம் காண்பர்.  வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் சிறப்பான வளர்ச்சி, பணவரவைப் பெறுவார்கள்.
 
மாணவர்கள் ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியம் பயிலும் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறுவர். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனங்களில் பயணம் செய்து ஆபத்தான இடங்களுக்குள் பிரவேசித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட அனுகூலமாக மாறும் நிலை உண்டு. தர்மசிந்தனையும் ஆன்மிக வழிபாடும் உங்களை காத்து நிற்கும்.
பரிகாரம்: நவகிரக புதன் பகவானுக்கு மல்லிகை மலர் மாலை சாத்த வெற்றியுண்டாகும்.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar