Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ... கடகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. பணப்புழக்கம் அதிகரிக்கும்.. லாபமோ லாபம் கடகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்..வீடு கட்டும் யோகம்
எழுத்தின் அளவு:
மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்..வீடு கட்டும் யோகம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
06:04

மிருகசீரிடம்: உற்சாக மனப்பான்மை

உண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே, உங்களின் மனக்கவலைகள் அடியோடு விலகும். நல்லவர்களின் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.
இந்த வருடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத் தரும். வீடு மனை புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் வாய்ப்புகள் வந்து சேரும். புத்திரர்களால் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு பிரச்னைகளில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்கும் வரக்கூடிய கருத்து வேறுபாடுளை களைவதில் புத்திரர்கள் பாலமாகச் செயல்பட்டு சரிப்படுத்துவார்கள். ஆயுள் அபிவிருத்தி ஏற்படும்.
அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு அடிக்கடி வெளியூர், வெளிநாடு என  பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரிடும்.  ஒரு பலனும் இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு ராசிநாதன் சூரியன் பத்தில் நிறைந்து அனுகூலத்தை தருகிறார். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலை உருவாகும்.
வியாபாரிகளுக்கு சீரான லாபம் கிடைக்கும்.  லாப விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் அதிகரிக்கச் செய்வர். ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள்.  நகைகளை விற்பனை செய்வோர் தொழில் முன்னேற்றம் காண்பர். பூஜைப் பொருட்களுக்கான கடை வைத்திருப்போர் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டு மகிழ்வர்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். தேவையான சலுகைகள் கிடைக்கப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் அவசிய செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள்.  பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்துவர். உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு துணை நிற்கும். தேவையான சமயத்தில் தக்க ஓய்வும் பெற்று நிம்மதியுடன் வாழ்க்கை நடத்துவீர்கள்.
கலைத்துறையினர் தங்களின் திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரம்  பெற்று மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர்.  வேடிக்கை விநோத மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் மிகுந்த வரவேற்புடன் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். இசைக்கலைஞர்கள் புகழ், பாராட்டு பெறுவார்கள். தொழில் வகை எதிரிகள் கூட உங்களுடன் ஏற்பட்ட பகைக்காக வருத்தம் கொள்வர்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பிறருக்கான நடத்தி தரவேண்டிய பணிகளையும் செய்து முடிப்பீர்கள். ஆன்மிக எண்ணம் மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வ காரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்ய மாட்டீர்கள். மேலிடம் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பர். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
மாணவர்கள் கல்விக்கேற்ப வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய தெளிவு பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனதில் அமைதி குடியிருக்கும. பிரயாணத்தால் சுகமான அனுபவம் உண்டாகும். கைச்செலவு பணத்தை கவனமுடன் வைத்துக்கொள்ளும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்க துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ


திருவாதிரை: ஆடை, ஆபரணச் சேர்க்கை

இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பதோடு, மற்றவர்களுக்கு  வழிகாட்டியாக  பொறுப்புடன் பணியாற்றி உரிய பலன் பெறும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, வீண் செலவுகள் குறைந்து சுபவிஷயங்களில் செலவுகள்  அதிகரிக்கும்.

இந்த வருடம் உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள் வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் செலவுளை பொருட்படுத்தாமல் செய்வீர்கள். புத்திர வகையில் அனுகூலம் உண்டு. அரசுவகையில் கடன், வழக்கு, பகை உருவாகும்.
குடும்பத்தில் மனைவியின் அனுகூல செயல்பாட்டால் நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையை உடனுக்குடன் ஏற்பது நிம்மதிக்கு வழிவகுக்கும்.  
 அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விரயச்செலவுகளைச் சந்திப்பர். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மென்மையான சிந்தனை உருவாகும். கல்வித்துறை, வங்கி, நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் திறம்பட பணியாற்றி  நிர்வாகத்திடமும் ஊழியர்களிடமும் நற்பெயர் பெறுவார்கள். எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்து நெருக்கடிக்கு ஆளாகலாம் கவனம்.
.
வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். காகிதம், பேன்ஸி ஷாப், நறுமணப்பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் முன்னேற்றம்  காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்களால் லாபம் பெருகும்.  மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தர்மச் செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். மக்கள் மத்தியில் நற்பெயரும், புகழும் பெறுவீர்கள். வீடு மனை வாகனம் வாங்க வாய்ப்புண்டு. கடன் மற்றும் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.
குடும்ப பெண்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பணநெருக்கடியில் இருந்து முற்றிலும் விலகுவர். நற்பலன்களை முழுவதும் பெற ஆயத்தமாகுங்கள். அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் உத்வேத்துடன் செயல்பட்டு மனநிறைவு, நிம்மதி காண்பர். ஆன்மிக ஈடுபாட்டால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். சமூகத்திலும், உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். வீட்டை துாய்மை, அலங்காரம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களின் முழுத்திறமையையும் காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.  ஒரே நேரத்தில் பலவித வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகள் செய்வது நல்லது. பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கில் சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும்.
மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் விருது, பாராட்டு பெறுவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தெய்வ வழிபாடு மனதை நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. தந்தை மகன் உறவு நிலை சுமுகமாக இருக்கும்.
பரிகாரம்: அம்பாள் கோவிலுக்குச் சென்று வர பிரச்னைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 6, 8, 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா


புனர்பூசம்: வீடு கட்டும் யோகம்

கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தி யோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி அனைவரிடமும் காரியங்களை சாதித்துக் கொள்வதில் வல்லமை மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே,
இந்த வருடம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் உங்கள் பேச்சில் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நற்செயல்களால் புகழை தக்க வைத்துக் கொள்வீர்கள். வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து வெளியேறுவார்கள். எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பு கொடுப்பர்.  கணவன் மனைவி ஒற்றுமையில் சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிதாக வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.   
அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சம்பள உயர்வால் பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். வீடு மனை வாகனங்களில் முன்னேற்றம் உண்டு. புத்திரர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்டிப்பது நல்லது. எதிராக செயல்படுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவர்.  
வியாபாரிகள் ஆர்வமுடன் செயல்பட்டு வளர்ச்சி காண்பர். பொருளாதார நிலை உயரும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பணத்தில் வீட்டு மனை, நிலம் வாங்குவீர்கள்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சேமிப்பை சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் நிலை ஏற்படும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்கும் வாய்ப்புண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் செல்வாக்கு அதிகரிக்கும்.  பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆயுள் பலம் பெறும்.  
 
அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். தொண்டர்களின் மத்தியில் மதிப்பு மரியாதை உயரும். அவர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் முக்கிய பொறுப்புகளை கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். சில சமயத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சில சமயத்தில் வம்பு, வழக்குள் வந்து சேரலாம். அதற்காக வீண் கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் சாதனை படைத்து பாராட்டு, விருது கிடைக்கப் பெறுவார்கள். நீச்சல்  வீர்கள் சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். பேசும் பேச்சில் அனல் வீசும். பொறுமையும். நிதானமும் அவசியம். சக கலைஞர்களால் உதவி கிடைக்கும்.  

மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
பரிகாரம்: நவகிரக குருவுக்கு மஞ்சள் பூ மாலை சாற்றி வழிபட துன்பம் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 2, 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar