சூலூர்: செங்கத்துறை ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
சூலூர் அடுத்த செங்கத்துறையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் பழமையானது. இங்கு, குண்டம் திருவிழா, கடந்த, 3 ம்தேதி காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு திருவிழா சாட்டுதல் நடந்தது. கடந்த, 8 ம் தேதி, கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. நள்ளிரவு மயானக் கொள்ளை நடந்தது. நேற்று முன்தினம் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அலகு நிறுத்துதல், பள்ளயம் எடுத்து ஆடுதலும் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.