சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி மாரியம்மன் கோயிலில் ஏப். 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிய உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இரு நாட்களுக்கு முன்பு கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மறுநாள் கயர் குத்து திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.