அன்னூர்: மொண்டிபாளையம் மகா பைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி விழா நடக்கிறது.
மொண்டி பாளையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 6:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகளை வைத்து சங்காபிஷேகம் நடக்கிறது. இத்துடன் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.