சிங்கம்புணரி கோயில்களில் பால்குடம், விஷு கனி அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2023 02:04
சிங்கம்புணரி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிங்கம்புணரியில் பால்குட விழா, விஷு கனி காணும் நிகழ்வு நடந்தது.
சந்திவீரன் கூடத்தில் இருந்து கிராமத்தார்கள் சார்பில் பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு வழியாக சேவுகப்பெருமாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்றனர். அங்கு பூரணை புட்கலை உடனான ஐயனார் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. வராஹி அம்மன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு வழிபாடு நடந்தது. விஷூ கனி அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடத்தப்பட்டது. அம்மனுக்கு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.