பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
03:04
உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலை அடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல், 950 மீ., உயரத்தில், பஞ்சலிங்க கோவில் மற்றும் அருவி உள்ளது. தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுக்க திரண்டனர். மும்மூர்த்திகளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால், கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. பஞ்சலிங்கம் அருவியில் நீராடி, கிராமங்களிலுள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய, குடங்களில் புனித நீர் எடுத்து, மந்திரங்கள் கூறி, சக்தி கரகம், தீர்த்தம் அமைத்து, பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். கிராம கோவில்களுக்கு, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் எடுத்துச்செல்வதை இப்பகுதி மக்கள் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.