போடி: தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி 8 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 7.35 மணிக்கு பெரியாண்டவர் கோயிலில் இருந்து சிவன் உருவப்படம், திருஉண்டியலை நகரின் முக்கிய ரோடு வழியாக பரமசிவன் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. விழாவினை முன்னிட்டு சிவன் மற்றும் லட்சுமி நாராயணன், முருகன்,வள்ளி, தெய்வானைக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. திருவிழா இன்று ஏப்.15 முதல் துவங்கி ஏப். 22 வரை நடக்கிறது. தக்கார் மாரிமுத்து, அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடக்கிறது. அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், வர்த்தகர்கள் சங்கம், பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.