பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
திண்டுக்கல்: திண்டுக்கலில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு, பள்ளிவாசல் அருகே முஸ்லிம்கள் வணக்கம் தெரிவித்தனர். திண்டுக்கல் குடைப்பாறைபட்டி விநாயகர் சிலை ஊர்வலம், மதுரை ரோடு பள்ளிவாசல் வழி, செல்வது வழக்கம். இந்த ஆண்டு, பிரச்னையை தவிர்க்க, பள்ளிவாசல் வழி செல்லும் போது, வாத்திய கருவிகள் இசை க்க, போலீசார் தடை விதித்தனர். நேற்று காலை 9.30 மணிக்கு, குடைப்பாறைப்பட்டி பிரமுகர்கள் கோபால், பிச்சை, முருகன், செல்லமுத்து, கீரை பிச்சை தலைமையில், விநாயகர் ஊர்வலம் துவங்கியது. பள்ளிவாசல் அருகே கவுன்சில் உறுப்பினர்கள் காஜா மைதீன், மகபூப் சுபானி, சாகுல்அமீது உள்ளிட்டோர் வணக்கம் தெரிவித்தனர். அமைதியாக கடந்த ஊர்வலம், கோட்டைகுளம் சென்றது; அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. ஜெயசந்திரன் எஸ்.பி., தலைமையில், பாதுகாப்பு தரப்பட்டது.