பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
திருப்பூர்: கொசுத் தொல்லையை சுட்டிக்காட்டும் விதமாக, விநாயகர் சிலைக்கு கொசு வலை அணிவித்து, திருப்பூர் மாவட்ட மக்கள், வழிபாட்டில் ஈடுபட்டனர். திருப்பூர், 44வது வார்டுக்கு உட்பட்ட பூலவாரி சுகுமாரன் நகரில், சிவசேனா சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில், விநாயகர் சிலைக்கு கொசு வலை அணிவித்தனர்; இத்துடன், கொசுவத்தி சுருளும் பற்ற வைத்திருந்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: கொசுத் தொல்லையால், வீட்டில் இருக்க முடிவதில்லை; மின்தடை நேரங்களில் வீட்டுக்குள் தூங்க முடிவதில்லை. அதனால்,கொசு கடிக்கக் கூடாது என்பதற்காக, விநாயகர் சிலைக்கு கொசுவலை போர்த்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.