ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பட்டு வஸ்திரங்கள் ஸ்ரீரங்கம் வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 09:04
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை 19ம் தேதி புதன் கிழமை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள், கிளி மாலை மற்றும் மங்கல சீர்வரிசை பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர் , சுதர்சன் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கொண்டு வந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து விடம் வழங்கினர் இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி , சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , அர்ச்சகர் சுந்தர் பட்டர் , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.