பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
மோகனூர்: இரண்டு நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கடந்த, 19ம் தேதி, நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, வீடுகள், தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள், இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அந்த சிலைகளை, மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். இரண்டு நாட்களாக, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், சீராப்பள்ளி, பட்டணம், நாமக்கல், வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை, வேன், டெம்போ, மினி ஆட்டோ, லாரிகள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், விசர்ஜனம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில், 200க்கும் அதிகமான விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.