9ம் நூற்றாண்டை சேர்ந்த தான வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 10:04
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த தான வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் பகுதியில் பண்டைய கால தொல் பொருட்கள் ஏராளமான அளவில் உள்ளன. ஏற்கனவே உறைகிணறு, கல்வெட்டு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது வட்டெழுத்துகளுடன் கூடிய கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தர்மபுரி அரசு கலைகல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர், தொல்லியல் ஆர்வலர் தமிழ்மகன் இளங்கோ, தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள் இளந்திரையன், சீனான் உள்ளிட்டோர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ஏற்கனவே கண்மாய், மடைகள் அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு கண்டறிந்தனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டு பற்றி கூறுகையில்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு இது,இதில் உள்ள எழுத்துகள் கோயிலுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.
9ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு இது. இந்த இடத்தில் பெருமாள் சிலை இருந்து பொதுமக்கள் வழிபட்டுள்ளனர். அதனை அகற்றிய பின் இந்த கல்வெட்டை தற்போது வணங்கி வருகின்றனர், என்றார். திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் பகுதியை ஒட்டி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், பண்டைய கால பொருட்கள் இப்பகுதியில் ஏராளமாக உள்ளன. கல்வெட்டுகள் அனைத்தும் பண்டைய காலதமிழர்களின் அறிவுத்திறமையை வெளிகொணர்பவை எனவே திருப்பாச்சேத்தி பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.