பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
02:04
புளியரை: புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில், குருபெயர்ச்சி விழா சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில், சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி, சிணாமூர்த்தி கோயில் உள்ளது. கோயிலில், சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு நடுவே தெற்கு பார்த்த நிலையில், தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். கோயிலில் குருபெயர்ச்சி விழா நேற்று துவங்கியது. காலையில், மகா கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஜடாமகுட தீர்த்த அபிஷேகம் நடந்தது. வாசனை திரவியங்கள், மாப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் மற்றும் கும்ப அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை துவங்கியது.
நாளை (21ம்தேதி) மதியம் 12மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு ழிபாடு, தீபாராதனை நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவு 10 மணிக்கு குருபகவான், மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிப்பு பூஜை நடக்கிறது. குரு பெயர்ச்சி விழா பூஜைக்கான ஏற்பாடுகளை மேல்சாந்திகள் ஜமதக்கனி(எ) சேகர் மற்றும் திரசேகரன் செய்து வருகின்றனர். 23ம் தேதி சிறப்பு பூஜை வழிபாடுகள் காலை முதல் மதியம் நடக்கிறது. மாலை நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.