அழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2023 10:04
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி மற்றும் காளவாசல் சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்தை சீரமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
மதுரையில் விழா காலங்களில் போக்குவரத்தை சீரமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி, கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார் உள்பட அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் நெரிசலின்றி செல்வது குறித்து ஆலோசனை நடத்தினர். வைகை ஆற்றுப்பகுதியில் வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்கு பிரத்யேக வழி ஏற்படுத்தலாமா என்பது குறித்து மூங்கில் கடை பகுதி, ஏ.வி.பாலம் பகுதியில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். பின்னர் காளவாசல் சந்திப்பு பகுதியில் தற்போது மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்வதில் தடை உள்ளது. இதில் வாகனங்கள் எளிதாக சென்று திரும்ப ரவுண்டானா அமைக்கலாமா, அதற்காக மீடியன்களை அகற்றலாமா என்பது குறித்து பார்வையிட்டனர். நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், இப்பகுதியில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தோம். அந்த இடத்தில் சர்வே செய்து பின்னர் மீடியன்களை அகற்றுவது குறித்து ஆலோசிப்போம் என்றனர்.