ஓங்கோலில் சங்கர ஜெயந்தி விழாவை துவக்கி வைத்தார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2023 05:04
ஆந்திரா: ஆந்திரா, ஓங்கோலில் சங்கர ஜெயந்தி விழாவை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5 நாட்கள் ஏப்ரல் 24ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை தெரிவித்தார். ஆதி சங்கராச்சாரியார் நாடு முழுவதும் பயணம் செய்து சத்தியம், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை பரப்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. விழாவின் ஒரு பகுதியாக திருமதி எஸ்.வி சிவகுமாரி ஸ்ரீ நளினி பிரியா குச்சிப்புடி நிருத்ய நிகேதனைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞர் புதன்கிழமை இங்கு ‘சங்கர விஜயம்’ என்ற நடனப் பாலேவை நிகழ்த்தினார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்ரல் 14 முதல் ஓங்கோலில் முகாமிட்டு, மாநிலத்தின் இந்த பகுதியில் உள்ள பக்தர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆன்மீக பணிகளை செய்து வருகிறார்.