அவிநாசி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்று முன்தினம் குரு,மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் குரு பெயர்ச்சி அடைந்தார். அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சபா மண்டபத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.இதில் குரு பகவானுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார பூஜைகள் நடந்தது.மேலும் கோவில் மூலஸ்தான சுற்று பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.