பழநியில் குருபெயர்ச்சி விழா : தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2023 06:04
பழநி: பழநியில் குருபெயர்ச்சி விழா திருஆவினன்குடியில் நடைபெற்றது. பழநி மலைக் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயில் உள்ளது. நேற்று இரவு 11:27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5:30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம், அர்ச்சனை தீபாதாரணை நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.