காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நித்திய அன்னதான குழு சிவனடியார்கள் சார்பில் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சம் கொண்டு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் நித்திய அன்னதாக குழு சிவனடியார்கள் சார்பில் ருத்ராட்சம் சேகரித்து ஆவுடையார் மற்றும் லிங்கம் வடிவமைத்துள்ளனர். இந்த லிங்கம் பூக்கடை சத்திரம் பகுதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பின் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பருவதமலைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். பருவதமலை கோவில் அடிவாரத்தில் நித்திய அன்னதான குழுவிற்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் உள்ளது. பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் தரிசனத்திற்காக ருத்ராட்சம் கொண்டு வடிவமைக்கப்பட்ட லிங்கத்தை பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட இருப்பதாக குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.