பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
11:04
ஆர்.எஸ்.மங்கலம்: அட்சயதிதியை நாளான நேற்று, விளை நிலங்களில், விவசாயிகள் விதை நெல்லிட்டு சூரிய பகவானை வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகள், விவசாயம் செழிப்பதற்காக சித்திரை 1, அட்சய திதியை நாள், ஆடி 18 ஆகிய முக்கிய தினங்களை தேர்வு செய்து, அன்றைய தினத்தில், குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் அல்லது மூத்தோர்கள் மூலம் விளைநிலத்தில், விதைக்கக்கூடிய தானியங்களை இட்டு, வரும் ஆண்டில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என சூரிய பகவானை வழிபாடு செய்வது, இப்பகுதிகளில் முன்னோர்கள் காலம் தொட்டு இன்றளவும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், தமிழ் வருட பிறப்பான சித்திரை முதல் நாள் அன்று ஏராளமான விவசாயிகள் விளைநிலங்களில் விதைநெல்லிட்டு வழிபாடு செய்த நிலையில், அட்சய திதியை நாளான நேற்று, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், அதிகாலையில் விவசாயிகள் வயல்களில் குடும்பத்துடன் விதை நெல்லிட்டு, தேங்காய் உடைத்து, வரும் ஆண்டில் மகசூல் செழிக்க வேண்டி, சூரிய பகானை குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.