பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
03:04
புட்டப்பர்த்தி : உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட, அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே என்ற பகவான் சத்யபாபாவின் ஆராதனை தினம் புட்டப்பர்த்தியில் சிறப்பாக நடைபெற்றது.
சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. இன்று (24ம் தேதி) ஆராதனை விழாவை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலும் ஹாலில் பிரதானமாக காணப்படும் சாய்பாபாவின் மகா சமாதி பல்வேறு விதமான மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, பாபாவிற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. வேதமந்திரம் முழங்க துவங்கிய விழாவில் காலை முதல் இரவு வரை சாய் பஞ்சமிர்த கீர்த்தனைகள் , இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா மற்றம் மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி இந்த கீர்த்தனைகளை இசைத்தனர். உலகம் முழுவதிலும் உள்ள சாய் லட்சக்கணக்கான சாய் பக்தர்கள் நேரிலும், ஆன்லைன் மூலமும் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆடைகள், அன்னதானம் வழங்கப்பட்டது.