குன்னத்தூர் மாகாளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 05:04
அன்னூர்: குன்னத்தூர் மாகாளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
குன்னத்தூர், வரசித்தி விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவிலில், 106 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 18ம் தேதி வரை தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 19ம் தேதி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது. இதையடுத்து 23ம் தேதி வரை தினமும் இரவு பக்தர்கள் பூவோடு உடன் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அணிக்கூடை எடுத்தல், ஜமாப், மயிலாட்டம், காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மதியம் அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்தி வருதல், மாலையில் மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. வரும் 26ம் தேதி இரவு அபிநயா குழுவின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.