சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் உள்ள சிவனேச வல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஜனகர், ஜனாதரர், ஜனார்த்தனன், ஜனகுமாரர் ஆகியோரின் குருவான தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் பிரசாந்த் சர்மா பட்டர் தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் நவகிரக குரு மீன் ராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து நேற்று குருவுக்கும் குருவாக உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பரிகார பூஜை, மஹாபூர்ணாஹீதி பூஜைகள் நடந்தது. பூசாரி கருத்தப்பாண்டி தலைமையில் 16 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து புனிதநீரை ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிரதோஷ கமிட்டி தலைவர் காட்டுராஜா, முத்துராமன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக கோயில் முன்பாக உள்ள குளத்தை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்வதற்கான பூமிபூஜை நடந்தது.