அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2023 08:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா இன்று 25ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவானது மே 8ம் தேதி வரை நடைபெறுகின்றது. விழாவில் பெரிய தேர் மே 2 மற்றும் 3ம் தேதிகளிலும், அம்மன் தேர் 4ம் தேதியும் என மூன்று நாட்கள் தேரோட்டம் நடைபெற உள்ளது.