தண்டு மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 12:04
கோவை: தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது.
கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் இன்று சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை 27ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 28ம் தேதி லட்சார்ச்சனை, 30ம் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.