பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
01:04
கூடலூர்: கூடலூர், புளியம்பாறையில் 600 ஆண்டுகள் பழமையான ஆயிரம்வில்லி பகவதி கோயில், புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
கூடலூர், புளியம்பாறை ஆயிரம்வில்லி பகவதி கோவில் கும்பாபிஷேகம் திருவிழா கடந்த 22ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று வரை யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை கணபதி ஹோமம் தொடர்ந்து, பிராஸாத பிரதிஷ்டை, பீட பிரதிஷ்டை, பிம்ப கலசாதிகள் உள்பிரவேசனம், பராத்யாவாஹனகள், அபஸ்தாவாஹன், மந்திராவாஹன், தானமூர்த்தம், பிம்பபிரதிஷ்டை, அஷ்டபந்தன கிரியை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு பிரம்மமஸ்ரீ தந்திரி கிழக்கும்பாடத்து வாசுதேவன் நம்பூதிரிப்பாடு தலைமையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.