ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ராம நவமி திருமஞ்சனம், சேர்த்தி சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 09:04
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ராம நவமி வைபவத்தை முன்னிட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் இன்று ஸ்ரீராம நவமி வைபவத்தை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7.00 மணியளவில் புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுகிறார்.. பகல் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சேரகுலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார். மற்றும் இன்று வெளிக்கோடை உற்சவத்தின் 5ம் திருநாளை முன்னிட்டு, அர்சுன மண்டபத்திலிருந்து மாலை 6.00 மணியளவில் புறப்பட்டு, கோடை நாலுகால் மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளுகிறார்.