அவிநாசி காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா : திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 09:04
அவிநாசி: அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அவிநாசி காந்திபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா,கடந்த 25ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து,நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மே 1ம் தேதி மாவிளக்கு எடுத்தல், அழகு குத்தும் விழா முத்துக்குமாரசாமி கோவிலில் நடைபெறுகின்றது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.