பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா, வரும் 8ம் தேதி துவங்குகிறது.
பொள்ளாச்சி அருகேயுள்ள, சூலக்கலில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா வரும், 8ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் போடும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 9ம் தேதி காலை, வேல் புறப்பாடு, இரவு, பூச்சாட்டு விழாவும்; 15ம் தேதி இரவு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. 16ம் தேதி இரவு, கம்பம் நடுதல் விழா, பூவோடு எடுத்தல், 17ம் தேதி காலை, அங்குரார்ப்பணம், யாகசாலை ஆரம்பம், கொடியேற்றம்; இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை காலை 9:00 மணிக்கு சப்பரத்திலும், இரவு, 8:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 24ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 26ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல்; 27ல் மாலை, மூன்றாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சியும், தேர்க்கால் பார்த்தல், கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.