பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
வால்பாறை; ரொட்டிக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு பூட்டி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை முனீஸ்வரன், நாகாத்தாள், மாரியம்மாள், கருப்பராயன் கோவிலின், 44ம் ஆண்டு திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு சக்திவிநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும் அலகு பூட்டியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தவனர். தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.