பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி கோவிலில், பரிணய உற்சவம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இங்கு பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் விழா நடந்தது. இக்கோவிலில் காலை, 5:55 மணிக்கு சுப்ரபாதம், காலை நேர அலங்கார பூஜைகள், ஏகாந்தம் மற்றும் ஆர்த்தி நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடும், திருவீதி உலாவும் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. இப்பூஜையில் கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி., தொழில் நிறுவனங்களில், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.