பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
மேட்டுப்பாளையம்: காரமடை சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பிரதிஷ்டா தின பூஜை நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் - காரமடை சாலை சிவன்புறத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 32ம் ஆண்டு பிரதிஷ்டா தின பூஜை, மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்று (1ம் தேதி) மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன. இரண்டாம் தேதி உஷ பூஜை, சதுர் சுத்தி, உதயாஸ்தமன பூஜை, ஐயப்ப சுவாமிக்கு, 25 கலசாபிஷேகம், வானவேடிக்கையுடன் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மூன்றாம் தேதி, 108 கலச பூஜை, 108 கலசாபிஷேகம், மகா விஷ்ணு, கணபதி, முருகர், பகவதி அம்மன், நவகிரக சுவாமி, நாகராஜர் ஆகிய சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. மதியம் சென்டை வாத்தியம் முழங்க, மகா தீபாராதனை பூஜை நடைபெற உள்ளது. மனக்குறைகள் போக்கவும், தோஷங்கள் அகலவும், தடைகள் நீங்கவும், சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், இந்த மூன்று நாட்கள், பூஜைகள் நடத்துவதாக, ஐயப்ப சேவா சமிதி தலைவர் அச்சுதன் குட்டி தெரிவித்தார்.