கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மே 2ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவ விழா வருகிற மே 2 அன்று நடக்க உள்ளது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு அபிஷேக அலங்காரமும், காலை 10:30 முதல் 11 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்க உள்ளது. திருக்கல்யாண விருந்து பகலில் 12:00 மணிக்கும், பள்ளியறை பூஜை இரவு 7:00 மணிக்கு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஏர்வாடி, கீழக்கரை பிரதோஷ வழிபாட்டு குழு மற்றும் கோயில் டிரஸ்டி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். விழாவில் கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்கின்றனர்.