பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
பல்லடம்: காரணம்பேட்டையில், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் பங்களிப்புடன் நடந்தது.
பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை கோடங்கிபாளையம் பிரிவில், உழவாலயம் சமூக அறக்கட்டளை சார்பில் உழவாலயம் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோவை, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொடுத்தார். உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். முன்னதாக, ஏப்., 26 அன்று கணபதி ஹோமம், நவகிரக பூஜை உள்ளிட்டவற்றுடன் விழா துவங்கியது. காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. உ.உ.க., நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ஈஸ்வரன் மற்றும் உழவாலயம் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உழவாலயம் சமூக அறக்கட்டளை சார்பில். அன்னதானம் வழங்கப்பட்டது.