மே. 7 ல் திருச்செந்தூர் காவடி பாதயாத்திரை புறப்படுகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து திருச்செந்தூர் சித்திரை மாத 47 வது ஆண்டு பாதயாத்திரை மே. 7 ந்தேதி சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புறப்படுகின்றனர். முன்னதாக ஆறாம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நகரப்பள்ளிக்கூடத்தில் காவடிகள் கட்டப்பட்டு நகர்வலமாக புறப்பட்டு சிலம்பணி விநாயகர் கோவிலுக்கு வருகின்றனர் .அங்கு மறுநாள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஏழாம் தேதி அதிகாலை காவடி பாதயாத்திரை புறப்படுகிறது. காளையார்கோவில், பரமக்குடி சாயல்குடி செல்லும் பாதயாத்திரையினர் மே. 14ல் திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோவிலை அடைந்து அங்கிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடியை முருகன் சந்நிதியில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து சந்தனக்காப்பு, சண்முகார்ச்சனை, தங்கரதம் இழுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கானோர் செல்லும் பாதயாத்திரையினர் ஏற்பாடுகளை பாதயாத்திரையினர் டிரஸ்ட் குழுவினர் செய்து வருகின்றனர்.