பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் திருச்சூர் பூரம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 07:05
பாலக்காடு: இரு பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற திருச்சூர் பூரம் திருவிழா நிறைவடைந்தனர்.
கேரள மாநிலத்தில், புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கடந்த ஏப். 29ம் தேதி நெய்தலைக்காவு பகவதி அம்மன் செண்டை மேளம் முழங்க வடக்குநாதர் சன்னதிக்கு வந்து மூலவரை வணங்கி தெற்கு கோபுர நடை திறந்து யானை மீது எழுந்தருளியதோடு ஆரம்த்தின. தொடர்ந்து பூரம் நாளான நேற்று முன்தினம் விழா கொண்டாடும் கணிமங்கலம் சாஸ்தா உட்பட 8 உப கோவில்களின் உற்சவர்கள் யானை மீது எழுந்து வடக்கும்நாதரை வணங்கி செல்லும் வைபவம் நடந்தன. தொடர்ந்து பிரஹ்மசுவம் மடத்தில் வரவு பஞ்சவாதியம், இலஞ்சித்தறை மேளம், செம்படை மேளம் ஆகிய இசை மழை நடந்தன. தொடர்ந்து திருவம்படி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில்கள் போட்டிபோட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்புடன் நடத்திய முத்துமணி குடை மாற்றம் பக்தி கடலில் மோதிய அலைபோல் திரண்ட மக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து உற்சவர்களுக்கு நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் இன்று அதிகாலை பிரமாண்ட வான வேடிக்கை நடந்தன. தொடர்ந்து திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும் எர்ணாகுளம் சிவகுமாரும் துதிக்கை உயர்த்தி வடக்குநாதர் கோவிலில் வணங்கி, உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றன. அடுத்த ஆணடு திருச்சூர் பூரம் விழா 2024 ஏப்., 19ம் தேதியாகும்.