பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 01:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் மே 4 இரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இக்கோயிலில் ஏப். 30 காலை 9:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து காலை, மாலை யாகசாலை பூஜைகளும், இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் யாகசாலை முன்பு சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. மே 4 காலை யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்க உள்ளது. அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார்.