பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை 2.85 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 01:05
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது ஸ்ரீசர்வ மங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் சிவபெருமான் உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் படுத்து உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு பிரதோஷ விழா, சிவராத்திரி, சோம வார பூஜை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் சார்பில், 10 உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பணத்தை எண்ணும் பணி நேற்று நடந்தது. திருப்பதி மாவட்ட அறங்காவல் துறை அதிகாரி ராமகிருஷ்ணாரெட்டி முன்னிலையில், செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி, அறங்காவல் குழு தலைவர் முனிசந்திரசேகர்ரெட்டி ஆகியோர் தலைமையில், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 2 லட்சத்து, 85 ஆயிரத்து 465 ரூபாய் இருந்தது.