திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் கோயில்களில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் முன்பு யாக பூஜை நடந்தது. சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி திருக்கல்யாணம் நடந்தது. திருநகர் அய்யனார் அச்சமுத்தமன் கோயில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாணம் அலங்காரமானது. திருமணமாகாத ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வர வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் நடந்தது. மீனாட்சி அம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.