மானாமதுரை சித்திரை திருவிழாவில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 05:05
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 6ம் நாள் மண்டகப்படியில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 25 ம் தேதி சித்திரை திருவிழா முடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது தினந்தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இரட்டை ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் தெற்கு ரத வீதியில் உள்ள கழுவேற்றும் பொட்டலில் திருஞானசம்பந்தர் அவதாரம் குறித்த சொற்பொழிவு நடந்த பின்னர் கழுமரத்தில் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள் வீதி உலா நடந்தது.இன்று காலை 10:00 மணியிலிருந்து 10:40 க்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.