பதிவு செய்த நாள்
02
மே
2023
05:05
பழநி: பழநி, சிவகிரிபட்டி, பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோயிலில் உமாமகேஸ்வரி, சிவகிரிநாதசுவாமி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
பழநி, ஆயக்குடி விக்னேஸ்வரர் வகையறா திருக்கோயில்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பழநி, இடும்பன் கோயில் சிவகிரிபட்டி பைபாஸ் சாலை அருகே உள்ளது. இக்கோயிலில் விநாயகர், இடும்பன், கடம்பன், முருகன், சிவகிரிநாதன், உமாமகேஸ்வரி மகாலட்சுமி, நவகிரக சன்னதிகள் உள்ளன. மாதந்தோறும் பிரதோஷ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ( மே.2.,) உமா மகேஸ்வரி சிவகிரிநாத சுவாமிக்கு சீர் வரிசைகள் வைக்கப்பட்டு, சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 11:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிறப்பு தீபாதாரணை நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோயில் பரம்பரை அலங்கா உள்ள ராஜா, செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.