திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு பாலகணேசர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாரநாடு பாலகணேசர் கோயிலில் வருடம்தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருகல்யாண மண்டபத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அலங்கார கோலத்தில் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு சிவச்சார்யார்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.