Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி லட்சுமி நாராயண பெருமாள் ... கோட்டை வராஹி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம், லட்சார்ச்சனை கோட்டை வராஹி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை தேரோட்டம் ; பக்தர்கள் அலையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை தேரோட்டம் ; பக்தர்கள் அலையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்

பதிவு செய்த நாள்

03 மே
2023
08:05

மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (மே 3) தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. அதிகாலை 5:05 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மனும், சுவாமியும் தேரில் எழுந்தருள தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாசி வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காண்பதற்கு சுற்றுப்பகுதி கிராமமக்கள் மற்றும் மதுரை மக்கள் திரளாக கூடியிருந்தனர். லட்சக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக  நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர்பவனி நடைபெற்று வந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டியுள்ளார். இப்போது பவனி வரும் தேர்கள் இரண்டும் ராணிமங்கம்மாளின் பேரனான விஜயரெங்கசொக்கநாத நாயக்கரால் (1706-1732)  செய்யப்பட்டவை. இரண்டு தேர்களிலும் சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியும், அம்மனும் தேரில் பவனி வரும் போது ஆபரணம் ஏதும் அணிவதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டியி ருப்பர். தேர் பவனி முடிந்த பின் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சியம்மனுக்கும் கிரீடம், ஆபரணங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

காலையில் தேரில் பவனி வரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் இரவில் சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். ருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தி வந்தனர். சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டு அவர்களை வதம் செய்து உலகைக் காத்து அருளினார். இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர். 12ம் திருவிழா அன்று ரிஷப வாகனத்தில்  சுவாமியும், அம்பாளும் பவனி வருவர். மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. , மே 4 கள்ளழகர் எதிர்சேவை, மே 5ல் வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar