கோட்டை வராஹி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம், லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 08:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஸ்ரீ கோட்டை வராஹி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் வேலூர் ஜெய் வராஹி பீடம் சுவாமி பள்ளூர் வராகிதாசன் தலைமையில் நேற்று துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி விக்னேஸ்வர பூஜை முடிந்து, லட்சார்ச்சனை துவங்கியது. நாளை (மே 3) லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், நாமாவளி அர்ச்சனை, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடக்கிறது.