தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு ; நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 06:05
தஞ்சாவூர் : பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்தியம் பெருமானுக்கு பால் மற்றும் சந்தன அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. நடந்த பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தஞ்சை நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வழிபட்டனர்.