போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தென்னங்கீற்று அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.