வீச்சு கருப்பணசாமி கோயிலில் திருவிழா ; அரிவாள் நேர்த்திக்கடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 06:05
பெரியகுளம்: பெரியகுளம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் காவல் தெய்வமான வீச்சு கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா துவங்கியது. நேத்திகடனாக அரிவாள் செலுத்தி போலீஸ்காரர்கள் வழிபட்டனர்.
பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் வீச்சுகருப்பண சுவாமி கோயில் உள்ளது. பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல்துறை குடும்பத்தினர் இதனை நிர்வகிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு வரும் எஸ்.பி., முதல் போலீஸ்காரர்கள் வரை வீச்சு கருப்பண சுவாமி கோயிலில் பொங்கல் வைத்து பணியை தொடர்கின்றனர். போலீஸ்காரர்களுக்கு காவல் தெய்வமாக துணை நிற்பதாக ஐதீகம். நேற்று மே 2 ல் கரகம் எடுத்தலுடன் திருவிழா துவங்கியது. இன்று மே 3ல் பொங்கல் வைத்தல், நாளை மே 4 முளைப்பாரி என மூன்று நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மே 9ல் மறுபூஜையன்று அன்னதானம் நடக்கும். இதில் தேனி மாவட்ட போலீஸ்காரர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். போலீசார்கள் நேத்திகடனாக அரிவாள் செலுத்தி வருகின்றனர். பூஜைகளை பூசாரிகள் முருகன் வினோத் ஏற்பாடுகளை விழா கமிட்டினால் செய்து வருகின்றனர்.