மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2023 01:05
சிவகங்கை : மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் உண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.
மானாமதுரை சித்திரை திருவிழா வரலாற்றில் முதன் முறையாக சாலை மார்க்கமாக சென்ற வீர அழகர்* *மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார்* சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழா நாட்களின் போது தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர் இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் விழா இன்று காலை 7:45 மணிக்கு நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு வீர அழகர் கோயில் அருகே எதிர்சேவை மண்டகப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிகள் அங்கிருந்து அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு இன்று அதிகாலை வீர அழகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா வந்து பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே காலை 7:45 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் வீரழகர் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார். அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது வைகை ஆற்றில் வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதினால் வீர அழகர் வழக்கம்போல் ஆற்றுக்குள் அமைக்கப்படும் மண்டகப் பணிகளுக்கு எருந்தருளி ஆயிரம் பெண் சப்படத்திற்கு சென்றடையும் சுவாமிகள், மானாமதுரை சித்திரை திருவிழா வரலாற்றில் முதன்முறையாக வீர அழகர் சோனையா கோயில் அருகே கரையேறி சாலை மார்க்கமாக வீர கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.அங்கிருந்து ஏராளமான பக்தர்கள் சாலை மார்க்கத்திலேயே சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.பின்னர் சுவாமிகள் அப்பன் பெருமாள் கோவில் மண்டகப்படிக்கு சென்றடைந்தார். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.